Write Tamil எளிதாக பயன்படுத்துவது எப்படி?

கையேடு      23-05-2021      ஆசிரியர்      1121 முறை படிக்கப்பட்டது

உள்ளடக்கம்

விசைப்பலகை வகைகள்
எப்படி பயன்படுத்துவது?
குறுக்குவிசை(Shortcuts) சிறப்பம்சம்
ஆங்கில விசைப்பலகை அட்டவணை

இணையத்தில் தமிழ் மொழியில் பலரும் பல நல்ல நல்ல கருத்துக்கள், கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் மேலும் பல நண்பர்கள் தங்களிடம் உள்ள கோப்புகளை திருத்தம் செய்யவும் தமிழ் மொழி எழுத்துருக்களை தங்களது கணினியில் நிறுவி பயன்படுத்திவருகிறார்கள்.

நமது நண்பர்களில் சிலர், கணிப்பொறியில் சரியான தமிழ் மென்பொருளை நிறுவ இயலாமல் தொடர்ந்து, இணையத்தில் உள்ள பல்வேறு இணையதளங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களுக்காகவும், அப்போதைய நேரத்தில் உடனடியாக இணையத்தைப் பயன்படுத்தி தமிழ் தட்டச்சு செய்யும் பயனர்களுக்காகவும் நமது WriteTamil தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பயனர்களுக்கு பார்ப்பதற்கு மிக எளிதாகவும், கண்களை உறுத்தாமலும், அயர்ச்சி ஏற்படுத்தாமலும் இருக்கும் நோக்கில் இந்த இணைய கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதை பயன்படுத்த எளிதாகவும் இருக்க வேண்டும் என்பதை முதன்மை இலக்காகக் கொண்டு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே கருநீலம், ஆரஞ்சு வண்ணம் மற்றும் சிகப்பு வண்ணம் கொண்டதாக உள்ளது.

தமிழ் விசைப்பலகைகளில்(Keyboard) மிகத் தேவையான விசைப்பலகை வகைகள், மிக எளிமையான விருப்பத்தேர்வுகள், அவசியமான பொத்தான்கள் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இப்போது நமது WriteTamil Tamil typing பயன்படுத்தி எப்படி எளிதாக தமிழில் எழுதலாம் என்பதை பார்க்கலாம்.

விசைப்பலகை வகைகள்

இங்கு மூன்று வேறுபட்ட தமிழ் விசைப்பலகையும், ஒரு ஆங்கில விசைப்பலகையும் சேர்த்து மொத்தம் நான்கு வெவ்வேறு வகையான விசைப்பலகைகள், பயனர் தேர்வாக சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ் தட்டச்சு பயின்றவர்களுக்காக தமிழ்99 மற்றும் பாமினி விசைப்பலகைகள் உள்ளன. தட்டச்சு தெரியாதவர்களுக்காக யுனிகோட்(Unicode) தமிழ் விசைப்பலகையும் உள்ளது. மேலும் தட்டச்சின் இடையிடையே ஆங்கில வார்த்தைகளைச் சேர்ப்பதற்கு ஆங்கில விசைப்பலகையும் இணைக்கப்பட்டுள்ளது.

இனிவரும் கையேடு, முழுக்க முழுக்க தமிழ் தட்டச்சு தெரியாத நண்பர்களுக்காகவும், யுனிகோட் பற்றி அறிந்தவர்களுக்காகவும் கொடுக்கப்படுகிறது. சுருக்கமாக அறிந்துகொள்ள இந்த‌ உரலியில் சென்று படிக்கலாம்.

எப்படி பயன்படுத்துவது?

தட்டச்சிடும் பெட்டியில் உங்களுக்கு இயல்புநிலையாகவே யுனிகோட் தமிழ் விசைப்பலகை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். எனவே உடனடியாகவே நீங்கள் தமிழ் யுனிகோட் முறையிலேயே தட்டச்சிடமுடியும்.

யுனிகோட் தமிழ் என்பது தமிழ் மொழி உச்சரிப்பின் ஒலிக்கு நிகரான ஆங்கில விசைப்பலகை விசைகள் ஆகும். அதாவது நீங்கள் ஆங்கில விசைப்பலகையில் தட்டச்சிடும் எழுத்தின் ஒலிக்கு ஈடான தமிழ் எழுத்தினை வெளிப்படுத்தும். எளிமையாக சொல்வதானால், உங்கள் திறன்பேசியில் தமிழ் வார்த்தைகளை, ஆங்கிலத்தில் உங்கள் நண்பர்களுக்கு vanakkam. Epadi Irukireerkal என்று குறுஞ்செய்தி எழுதும் முறையாகும்.

உதாரணமாக நீங்கள் "a" என்பதை அழுத்தினால், தட்டச்சுப்பெட்டியில் "" என்ற எழுத்து காண்பிக்கப்படும். அதுபோலவே "ammaa" என்று அழுத்தினால் "அம்மா" என்றும், "vanakkam" என்று தட்டச்சிட்டால் "வணக்கம்" என்று மொழிமாற்றிக் காண்பிக்கும். இது தமிழ் தட்டச்சு தெரியாத, ஆனால், ஆங்கில விசைப்பலகை தெரிந்தவர்கள் தயக்கமின்றி இணையத்தில் தமிழில் எழுத உதவும்.

குறுக்குவிசை(Shortcuts) சிறப்பம்சம்

WriteTamil தமிழ் எழுதியில், உங்களுக்கு குறுக்குவழி விசைகள் சிறப்பம்சம் புகுத்தப்பட்டுள்ளது. குறுக்குவிசை சிறப்பம்சம் என்பது வேறு வேறு தமிழ் விசைப்பலகைக்கு, சுட்டியைப் பயன்படுத்தாமல், விசைகளை(keys) பயன்படுத்தி விரைவாக மாற்றிக்கொள்ளும் வசதியாகும்.

"மிக விரைவாக ஒரு தமிழ் விசைப்பலகையில் இருந்து மற்றொரு வகை விசைப்பலகைக்கு மாற குறுக்குவிசை(Shortcuts) சிறப்பம்சம் உதவும்"

உதாரணமாக தமிழைப் பயன்படுத்தும்போது இடையே ஆங்கில சொற்களைப் புகுத்த ALT மற்றும் 1 என்ற விசைகளை அழுத்தினால், ஆங்கில விசைப்பலகைக்கு மாறிவிடும், உடனடியாக TAB விசையை அழுத்தினால், நீங்கள் விடுபட்ட இடத்தில் இருந்து ஆங்கிலத்தில் தொடரமுடியும். இதனால் நீங்கள் தமிழில் தட்ட‌ச்சிட்டுக் கொண்டிருக்கும்போதே, நேர விரயம் இல்லாமல் ஆங்கிலத்தில் தட்டச்சிட்டு தொடரமுடியும்.

தமிழ் விசைப்பலகை Chrome குறுக்குவழி விசைகள் Firefox குறுக்குவழி விசைகள்
ஆங்கிலம் ALT + 1 ALT + SHIFT + 1
யுனிகோட் தமிழ் ALT + 2 ALT + SHIFT + 2
தமிழ் 99 ALT + 3 ALT + SHIFT + 3
பாமினி ALT + 4 ALT + SHIFT + 4

ஆங்கில விசைப்பலகை அட்டவணை

யுனிகோட் தமிழ் முறை மிக எளிதான விசைப்பலகை என்றாலும், தமிழில் உள்ள சில முக்கியமான எழுத்துகளுக்கு, ஆங்கிலத்தில் வேறுபட்ட சில விசைகளைப் பயன்படுத்தி எழுதவேண்டும். புதியவர்களுக்கு குழப்பம் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக, சில தமிழ் எழுத்திற்கு உண்டான ஆங்கில விசைப்பலகை விசைகள் அட்டவணையாகத் தொகுத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஒருமுறை நீங்கள் பயன்படுத்தி தட்டச்சிட்டு பழகினால் உங்களால் மிக எளிதாகவும், வேகமாகவும் இந்த கருவியை பயன்படுத்த முடியும்.

குறிப்பு: தமிழ் 99 மற்றும் பாமினி ஆகிய தமிழ் விசைப்பலகைகள் தனியாக விசைப்பலகை அமைப்பைப் பெற்றிருப்பதால், நீங்கள் தமிழ் தட்டச்சு முறைகளை வகுப்பில் சேர்ந்து பயிலவேண்டும். ஆனால் யுனிகோட் தமிழ் விசைப்பலகை என்பது தமிழ் தட்டச்சு பயிலாத பயனர்களுக்கானது.

ஆங்கிலம் தமிழ் ஆங்கிலம் தமிழ் ஆங்கிலம் தமிழ்
a A i
ii / I u uu / U
e ee / E ai
o oo / O q / Q
r ர் R ற் w / W ந்
n ன் N ண் m ம்
ng ங் nja ஞ‌ x க்ஷ்
si சி Si ஸி sh ஷ்
shi ஷி kau கௌ yu யு

Ads

ads

© 2021 WriteTamil. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டுள்ளது.